பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

 

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட பல திட்ட தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு பிரதமருக்கு முதல்வர்அழைப்பு விடுகிறார். காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், கல்லணை கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், ராமநாதபுரம் , தூத்துக்குடி எரிவாயு திட்ட தொடக்க விழா, 100 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைக்க என பல திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை அழைக்கவுள்ளார்.

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

அதேபோல் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக கோரப்பட்டுள்ள நிதியுதவியை அளிக்கக்கோரியும் முதல்வர், பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.முன்னதாக நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் அளிக்கும்படி அமித் ஷா வலியுறுத்த, 30 தொகுதிகளை மட்டுமே வழங்க இயலும் என எடப்பாடி பழனிசாமி கூறியதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.