“ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு” – டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

“ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு” –  டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

2 நாள் பயணமாக முதல்வர் பழனிசாமி டெல்லி செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு” –  டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அதே சமயம் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.

“ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு” –  டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் 2 நாள் பயணமாக வரும் 18ஆம் தேதி முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுக பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜகவே அறிவிக்கும் என்று அக்கட்சியினர் கூறி வந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி, அதிமுக பெரிய கட்சி. அதனால் பாஜக அதிமுக தான் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கும் என்று ஜகா வாங்கியுள்ளார்.