7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பேருந்து சேவை, ரயில் சேவை என பொது போக்குவரத்தும் துவங்கியுள்ளன.

7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

இந்நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்புப் பணி பற்றி முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். மாலை 3 மணிக்கு நடக்கும் ஆய்வுக்கூடத்திற்கு 7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். முதல்வர் பழனிசாமி ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ள 21 பணிகளை தொடங்கி வைத்தும், 12 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கலும் நாட்டுகிறார்.

7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

முன்னதாக தமிக முதல்வர் பழனிசாமி மதுரை, வேலூர், சேலம் என தமிழகத்தில் சுமார் 15 மாவட்டத்திற்கு மேலாக ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.