கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

கரூர், அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டவாரியான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதே சமயம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

கரூர், அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

திருவாரூர், கடலுார், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20ற்கும் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கரூர், அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

இந்நிலையில் வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். 3 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.