“எஸ்பிபி புகழுக்கு மேலும் பெருமை” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

“எஸ்பிபி புகழுக்கு மேலும் பெருமை” : முதல்வர் பழனிசாமி  வாழ்த்து!

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எஸ்பிபி புகழுக்கு மேலும் பெருமை” : முதல்வர் பழனிசாமி  வாழ்த்து!

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனினும் இனிமையான தனது குரலால் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி இந்திய மக்களையும் கவர்ந்த பிரபல திரைப்படப் பாடகரும் ,திரைப்பட நடிகரும் எஸ்பிபி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை அவர்களின் விளையாட்டு திறனை அங்கீகரித்து அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

“எஸ்பிபி புகழுக்கு மேலும் பெருமை” : முதல்வர் பழனிசாமி  வாழ்த்து!

இதேபோல் திருநெல்வேலியை சேர்ந்த வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, ஓவியர் சிவசங்கர், மாராச்சி சுப்புராமன், மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், தஞ்சாவூரை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் சாந்தி சமூக அறக்கட்டளையின் நிறுவனமான மறைந்த சுப்பிரமணியன், ராமநாதபுரத்தை சேர்ந்த மறைந்த ஹவில்தார் பழனி ஆகியோருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. மத்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/TNGOVDIPR/status/1353985746114236416

முன்னதாக மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10பேர் உள்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது