டெல்லி சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி!

 

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடத்தப்படவிருப்பதால் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆளும் அரசான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது. பிரதான கட்சிகளான திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் சூழலில், திமுகவுக்கு சவால் விடும் வகையில் அதிரடியாக நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி . அதில் ஒன்று தான், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்.

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி!

இந்த திட்டத்திற்கான நிதியுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக முதல்வர் பழனிசாமி , டெல்லி செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, இன்று காலை டெல்லிக்கு புறப்பட்ட முதல்வர் டெல்லி சென்றடைந்திருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

பிரதமர் உடனான சந்திப்பின் போது காவிரி – குண்டாறு திட்டம் உள்ளிட்ட தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். மேலும், நிதி விடுவிப்பு குறித்து பிரதமரிடம் முதல்வர் மனு அளிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.