முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

 

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை கொண்டப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின் வாழ்த்து செய்தியில், “ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்து. தமிழக மக்கள் எல்லாம் நலன் வளங்களுடன், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும். மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது ” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

நவராத்திரி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை தேவி வதம் செய்த நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் 9ம் தேதி (அக்டோபர் 25) நவமி திதியில், அன்னையின் ஆயுதங்களை பூஜை செய்த நாள் ஆயுத பூஜையாகவும், தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழித்த தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக (அக்டோபர் 26) ‘விஜயதசமி’ கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.