சோத்துப்பாறை அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

 

சோத்துப்பாறை அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

அக்.26ம் தேதி முதல் சோத்துப்பாறை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சோத்துப்பாறை அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், மழையை தொடர்கொள்ள தேவையான உபகரணங்கள் ஆயத்த நிலையில் இருக்கின்றன. இதனிடையே மழையால் பல நீர் நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சோத்துப்பாறை அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

அந்த வகையில், தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 26ம் தேதி முதல் தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 15 வரை வினாடிக்கு 331.95 கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க வேண்டும் என்றும் நீர் திறப்பின் மூலமாக 2,869 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதோடு குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.