இந்த நம்பருக்கு போன் செய்து மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம்!

இந்த நம்பருக்கு போன் செய்து மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம்!

சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நம்பருக்கு போன் செய்து மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம்!

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மின்தடை நிலவி வருவதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக மின்கம்பங்கள் எதையும் பராமரிக்க அதிமுக அரசு தவறாகவும், கடந்த ஆட்சியின் அலட்சியத்தால் தான் மின்தடை ஏற்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சூழலில் சென்னை அண்ணா சாலையில் உள்ள 10 மாடி கட்டடம் உடைய மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் தொடரமைப்பு கழக அலுவலகத்தில் நவீன கணினி மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு கொண்டுவர திட்டமிட்டது.

இந்த நம்பருக்கு போன் செய்து மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம்!

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் 24மணி நேரமும் இயங்கக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் செயல்பட உள்ள நிலையில் அதை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மெசேஜ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தமிழகம் முழுதும் மக்கள் மின் தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.