மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு!

மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு!

கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.

மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு!

அந்த வகையில் இன்று சேலத்தில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டாவில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் நெரிசலை குறைப்பதற்காக பல பாலங்கள் கட்டப் பட்டுள்ளது என்று கூறிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.

மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு!

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “கல்வியைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் கொள்கை. கல்விக் கொள்கை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அளிக்கும் பரிந்துரைக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.