பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

 

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த பணிகளை நேரில் ஆய்வுமேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு வந்தடைந்தார்.

தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 300 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

பின்னர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். முன்னதாக பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் திமுக சார்பில் முன்கள பணியாளர்களுக்கு அரிசியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.