சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஸ்டாலின்; பூரிக்கும் சகாக்கள்!

 

சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஸ்டாலின்; பூரிக்கும் சகாக்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 16 வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏகளுக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.

சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஸ்டாலின்; பூரிக்கும் சகாக்கள்!

இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி , முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம் எதிர்க்கட்சியை சேர்ந்த அனைவரும் அகரவரிசைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் , பாமக குழு தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் பதவி பிரமாணம் செய்து கொண்ட பின் கட்சி பாகுபாடின்றி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினர்.இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பாகுபாடின்றி அனைவர்க்கும் எழுந்து நின்று நன்றி கூறினார்.இதுபோன்ற அரோக்கியமான அரசியல் என்பது தமிழகத்திற்கு தற்போது பெரிதும் தேவைப்படுகிறது என்று சக திமுகவினர் சிலாகித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஸ்டாலின்; பூரிக்கும் சகாக்கள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதனால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர்கள் ஓபிஎஸ், பாஜக இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அழைப்பூ விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.