’அன்னை தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு பலகையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

’அன்னை தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு பலகையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

’அன்னை தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு பலகையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இது அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். அவர் மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் 47 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்க இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த அறிவிப்பு பலகையினை வெளியிட்டார். அந்த விளம்பர பலகையில் குருக்களின் பெயர்களும் அலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம். விளம்பர பலகையை வெளியிட்ட நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.