“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 12வது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பதவியேற்பு விழாவை அடுத்து அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் ,கோபாலபுரம் இல்லம் என சென்று வந்த ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு விரைந்தார். அங்கு ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று முதல் தனது முதல்வர் பணியை தொடங்கியுள்ளார்.முதல் கட்டமாக ஸ்டாலின் முக்கிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

*ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின். ரூபாய் 2000 வீதம் முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக ரூ. 4000 நிவாரண தொகையில் முதல் தவணையாக 2000 மே மாதமே வழங்கப்பட உள்ளது.

“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

*தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்

*ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மே 16 முதல் அமலுக்கு வருகிறது.

“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

*அனைத்து மகளிரும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்

*பொதுமக்களின் புகார்களுக்கு 100 நாளில் தீர்வு

“கொரோனா நிதி ரூ.4000” முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்