பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். பதவி ஏற்று ஒரு மாதம் ஆன நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வரான பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் ஸ்டாலின் மாலையில் மோடியை சந்திக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட் தேர்வு, கொரோனா தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து உள்ளிட்ட 35 அம்சங்களை கொண்ட கோரிக்கையை வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்திலிருந்து சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்ளவுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர்கள் தங்குவதற்கான தனி சிறப்பு அறையில் ஸ்டாலின் தங்க உள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்காக புல்லட் ப்ரூஃப் காரை பிரதமர் மோடி அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ராஜ்நாத்சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்கிறார்.