‘தடுப்பூசி தட்டுப்பாடு’ ஒன்றிய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை!

 

‘தடுப்பூசி தட்டுப்பாடு’ ஒன்றிய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘தடுப்பூசி தட்டுப்பாடு’ ஒன்றிய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றிய அமைச்சகத்தின் அலட்சியத்தால் போதிய தடுப்பூசி வழங்கவில்லை.தமிழ்நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும் தடுப்பூசி இல்லை என்ற நிலைதான் உள்ளது. தமிழ்நாட்டிற்கு இதுவரை 1.44 கோடி தடுப்பூசி வந்துள்ளன. 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும். சென்னையில் 45 இடங்களில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் சென்னையில் 45 இடங்களில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது.அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட தொகுதியாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது: இதற்கு காரணம், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கையை பிடித்து இழுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் தான்”என்றார்.

‘தடுப்பூசி தட்டுப்பாடு’ ஒன்றிய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை!

இந்நிலையில் தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாநில தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைக்கான உள் ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனியார் மருத்துவமனைக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 10% அளித்தால் போதுமானது.தமிழ்நாட்டில் மொத்தம் போடப்பட்ட தடுப்பூசியில் 4.5 சதவீதம் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுமார் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளன.ஆனால் அரசு மருத்துவமனையில் இரண்டு லட்சம் டோஸுக்கு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.தடுப்பூசி போடும் வேகத்தை கருத்தில் கொண்டு அதிகமான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.