Home தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!

தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இக்கட்டான காலக்கட்டத்தில், முதல்வரானதால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. இருப்பினும், இதிலிருந்து நாம் மீண்டு வருவோமென மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!

பதவியேற்ற முதல் நாளே, தான் 5 கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையில் தினமும் பங்கேற்று வரும் அதே வேளையில், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த துறைக்கான அமைச்சர்களை சந்தித்து ஆலோசனையை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை, 69% இட ஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 11ம் தேதியும் எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews