‘ரூ.109 கோடியே 71 லட்சம் செலவில்’ திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் அடிக்கல்!

‘ரூ.109 கோடியே 71 லட்சம் செலவில்’ திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் அடிக்கல்!

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவகம் அமைக்க காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

‘ரூ.109 கோடியே 71 லட்சம் செலவில்’ திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் அடிக்கல்!

நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய பகுதிகள் தனி மாவட்டமாக உருவாகும் என முதல்வர் அறிவித்தார். அதன் படி, அந்த மாவட்டங்களுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அவை தனி மாவட்டமாக உதயமாகின. அந்த வகையில், தமிழகத்தின் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர், கடந்த நவம்பர் 28ம் தேதி உதயமானது.

‘ரூ.109 கோடியே 71 லட்சம் செலவில்’ திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் அடிக்கல்!

இதனையடுத்து அந்த மாவட்டத்துக்கென தனி ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படாததால், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் வனச்சரகர் அலுவலகம் வளாகத்தில் சுமார் 14 ஏக்கர் நிலத்தில் ரூ.109 கோடியே 71 லட்சம் செலவில் புதிய திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அமைக்க, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஆட்சியர் சிவனருள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.