42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்!

 

42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் ,8 கோடியே 69 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 8 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களையும் தொடங்கி வைத்தார் முதல்வர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 9.30 மணி அளவில் திண்டுக்கல் சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில்
நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி, தேனி சரக டிஐஜி முத்துசாமி, முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறு-குறு -நடுத்தர தொழில் முனைவோர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தனித்தனியே கலந்துரையாடினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு கோடி 88 லட்சத்து 14 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை தொட்டிகள், புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தொடர்ந்து 8 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட சமூகநலத்துறை வேளாண் துறை வருவாய் துறை மாற்றுத்திறனாளிகள் துறை வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு மூலம் பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3530 பயனாளிகளுக்கு வழங்கினார்.