அரியலூர், பெரம்பலூரில் முதல்வர் இன்று ஆய்வு!

 

அரியலூர், பெரம்பலூரில்  முதல்வர் இன்று ஆய்வு!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று இரண்டு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

அரியலூர், பெரம்பலூரில்  முதல்வர் இன்று ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதே சமயம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. திருவாரூர், கடலுார், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20ற்கும் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அரியலூர், பெரம்பலூரில்  முதல்வர் இன்று ஆய்வு!

இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரியலூர் மாவட்டத்தில் ரூ. 26.2 கோடியிலான 14 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ரூ. 36.73 கோடியில் முடிவுற்ற 39 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அத்துடன் ரூ.129 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். நேற்று கரூர் மாவட்டத்தில் ரூ119கோடியில் 28முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.