108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர்!

 

108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர்!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மருத்துவ சேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் ஆயிரக்கணக்கான செவிலியர்களை அரசு நியமித்தது. அதோடு, ஆம்புலன்ஸ் சேவைக்கு கடும் கட்டுப்பாடு நிலவியதால் புதிதாக ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டன. இவ்வாறாக தமிழக அரசு மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது.

108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர்!

இந்த நிலையில், கொட்டும் மழையிலும் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். ரூ.24,77,54,000 மதிப்பில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய ஆம்புலன்ஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதல்வர் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.