70 ஆயிரம் மனுக்கள் பதிவேற்றம்; அசத்தும் ஸ்டாலின்

 

70 ஆயிரம் மனுக்கள் பதிவேற்றம்; அசத்தும் ஸ்டாலின்

தமிழ்நாடு மின் ஆளுமை வலைதளத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

70 ஆயிரம் மனுக்கள் பதிவேற்றம்; அசத்தும் ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டது. இந்த கோரிக்கைகள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவர் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் அதற்கென தனித் துறை உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த துறைக்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்கள் மனுக்களில் 70 ஆயிரம் மனுக்கள் தமிழ்நாடு மின் ஆளுமை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மனுக்களை கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதற்கான உடனடி தீர்வு எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.