கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நாளை வேலூர் செல்கிறார் முதலமைச்சர்!

 

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நாளை வேலூர் செல்கிறார் முதலமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இன்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,790 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,654ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் சென்றவர்கள் மூலமாக பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நாளை வேலூர் செல்கிறார் முதலமைச்சர்!

அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் செல்கிறார். திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்யவுள்ளார். 11வது மாவட்டமாக வேலூருக்கு செல்லும் முதல்வர் அங்கு விவசாயிகள், தொழில்துறையினர், மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனையும் நடத்துகிறார்.

இதுவரை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார்.