ஆளுமையின் அடையாளம் முதல்வர் எடப்பாடியார், குவியும் பாராட்டுக்கள்

 

ஆளுமையின் அடையாளம் முதல்வர் எடப்பாடியார், குவியும் பாராட்டுக்கள்

பெங்களூரைச் சார்ந்த பிரபல NGO, ஆனது Public Affairs Centre. இது முன்னாள் ISRO சேர்மன் கே.கஸ்தூரி ரங்கன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இவர்களின் கருத்து ஆய்வு துல்லியமாகவும், பல தரப்பட்டவர்களின் நம்பகத்தன்மையையும் பெற்ற ஒன்றாகும்.

ஆளுமையின் அடையாளம் முதல்வர் எடப்பாடியார், குவியும் பாராட்டுக்கள்

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டுத் திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் இந்த கருத்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பெரிய மாநிலங்களின் பிரிவில் இந்தியாவிலேயே 2 ஆவது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆளுமையின் அடையாளம் முதல்வர் எடப்பாடியார், குவியும் பாராட்டுக்கள்

அண்மைக் காலத்தில் எதிர்க்கட்சியினர் தமிழக வளர்ச்சி குறித்தும் ஆட்சி திறன் குறித்தும் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வந்த நிலையில் இந்த கருத்தாய்வின் முடிவானது, அவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த கருத்தாய்வைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ”தமிழகத்தின் ஆட்சி முறைக்கான இந்த பாராட்டுக்கள், தமிழக வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் வெளிப்பாடே” என்று கூறியுள்ளார்.

ஆளுமையின் அடையாளம் முதல்வர் எடப்பாடியார், குவியும் பாராட்டுக்கள்

மேலும்,” நமது மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாகக் கொண்டு செல்வதற்காக நாம் அனைவரும் கடினமாக உழைத்து, ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் பல்வேறு வகையான சோதனைகளை எதிர்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் நம் மாநிலத்தின் ஆட்சி முறையை பாராட்டும் வண்ணமாக இருக்கும் இந்த கருத்தாய்வானது, தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒரு மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாகி என்பதையும் பறைசாற்றுகிறது.