இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக வென்டிலேட்டர் கருவி உள்ளது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்

 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக வென்டிலேட்டர் கருவி உள்ளது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக வென்டிலேட்டர் கருவி உள்ளது. பொது மக்கள் கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
“தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அதிக பாதிப்பு உள்ள இந்த நான்கு மாவட்டங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக வென்டிலேட்டர் கருவி உள்ளது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்சென்னையில் கொரோனாத் தொற்றுப்பரவல் அதிகம் உள்ள மண்டலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மண்டல வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனாவை தடுக்க அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை 23,495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 2 லட்சத்து 71 ஆயிரம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக வென்டிலேட்டர் கருவி உள்ளது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்தமிழகத்துக்கு இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் பரிசோதனைகள் முறைப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் 75 ஆயிரம் படுக்கை வசதியும் சென்னையில் 17,500 படுக்கை வசதிகளும் உள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. விலையில்லா சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம்; அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது!

கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அனைத்துப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு. வென்டிலேட்டர் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் கொரோனா முற்றவில்லை. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்” என்றார்.