மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை… புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

 

மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை… புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை கிடைக்க 108 ஆம்புலன்ஸ்களை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனாத் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்க தீவிர கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்வதற்காக, அவசர ஊர்தி பெரிதும்

மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை… புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பயனுள்ளதாக உள்ளது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் 1,005 அவசரக்கால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, உடனடி மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதற்காகவும், மலையோர மற்றும் கிராமப்புற மக்களுக்கும் அதிவிரைவு மருத்துவ சேவை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் ஆம்புலன்ஸ் வாங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி புதிதாக 118 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு இதற்காக 20.25 கோடி ஒதுக்கியது. இதன் கீழ் 90 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. தனியார் 1.26 கோடி ரூபாய்

மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை… புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

வழங்கியிருந்தனர். இதன் கீழ் 18 ஊர்திகளும் வாங்கப்பட்டு இருந்தன. இது தவிர, ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் 3.09 கோடி ரூபாய் மதிப்பில் 10 ரத்த தான ஊர்திகளும் வாங்கப்பட்டுள்ளன. மொத்தம் 118 வாகனங்கள் அரசுப் பணியில் இணைக்கும் விழா கோட்டையில் நடந்தது.
இந்த ஊர்திகளில் செயற்கை சுவாச இயந்திரம், ஆக்சிஜன் அளவீட்டுக் கருவி, மின் அதிர்வு சிகிச்சை இயந்திரம் போன்ற உயர்தரக் கருவிகள் மற்றும் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ஊர்திகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை… புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில், பல பகுதிகளுக்கு இந்த ஆம்புலன்ஸ்களை அனுப்ப முதல்வர் முடிவு செய்துள்ளார். முதல்வரின் தொலைநோக்கு பார்வையால், கிராமப்புற, ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி, பச்சிளம் குழந்தைகள் ஆகியோருக்கு, நிறைவான, உடனடியான மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ உதவி கிடைக்கப்பெறும். மக்களின் துயர் நிலை அறிந்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் துவக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவையானது, மக்களிடையே பெறும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய 108 ஆம்புலன்ஸ்கள் மூலம், மக்கள் கூப்பிட்ட குரலுக்கு, மருத்துவ முதலுதவி சேவை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் கூட, மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு பேணிகாக்கும் வகையில் தமிழக அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டுவருகிறது” என்றார்.