திருவாரூர் மாவட்டத்தில் ரூ.686 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை பணிகள்… பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.686 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை பணிகள்… பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை மாவட்டங்களில் நடந்து வரும் நெடுஞ்சாலைப் பணிகள் பற்றி அவர் பட்டியலிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.686 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை பணிகள்… பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து முதல்வர் பேசுகையில், “நெடுஞ்சாலைத் துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு உயர்மட்டப் பாலங்கள், ரயில்வே கடவின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி நகருக்கு வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி சாலையில் தொடங்கி மயிலாடுதுறை – திருத்துறைப்பூண்டி சாலை வரையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி நகருக்கு சுமார் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச் சாலை, திருவாரூர் நகருக்கு புறவழிச் சாலை, மன்னார்குடி நகருக்கு சுற்றுச்சாலை, வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை ஆகிய சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கூத்தாநல்லூர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.686 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை பணிகள்… பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நன்னிலம் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலை ரூபாய் 336.20 கோடி மதிப்பீட்டிலும் தஞ்சாவூர்-மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம்-கோடியக்கரை சாலை ரூபாய் 154 கோடி மதிப்பீட்டிலும் கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டனம் சாலை ரூபாய் 191 கோடி மதிப்பீட்டிலும், இருவழித்தடச் சாலைகளாக அகலப்படுத்தி மேம்பாடு செய்ய நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது” என்றார்.