ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இதையொட்டி மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு காரணமாக அயோத்தியின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளது. எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

இந்நிலையில் ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பூமி பூஜை சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என 1992-ல் ஜெயலலிதா பேசியுள்ளார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.