பிளாஸ்மா தானம் வழங்கிய எம்.எல்.ஏக்கு முதல்வர் பாராட்டு

 

பிளாஸ்மா தானம் வழங்கிய எம்.எல்.ஏக்கு முதல்வர் பாராட்டு

கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியவில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. லாக்டெளன் காலத்திலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தே வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் உலகின் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் கடுமையான முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆயினும் இன்றைய தேதி வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட வில்லை என்பதே சோகம்.

பிளாஸ்மா தானம் வழங்கிய எம்.எல்.ஏக்கு முதல்வர் பாராட்டு

கொரோனா பரவலைத் தடுக்க‌ தனிமைப்படுத்தலே ஒரே வழியாக இருந்துவருகிறது. கொரோனா தொற்றி மீண்டவரின் உடலிலிருந்து பிளாஸ்மாவை எடுத்து அளிக்கப்படும் சிகிச்சையில் நோய் குணமாகிறது. எனவே, அந்தச் சிகிச்சையைத் தொடர மருத்துவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன் பிளாஸ்மா வங்கியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். அதனால், ஒரே நேரத்தில் 7 பேர் வரை பிளாஸ்மா தானம் வழங்க முடியும். பிளாஸ்மா வங்கியில் தானம் வழங்க முதல்நபராக பரமக்குடி எல்.எல்.ஏ சதன்பிராபகர் முன்வந்து அளித்திருக்கிறார்.

பிளாஸ்மா தானம் வழங்கிய எம்.எல்.ஏக்கு முதல்வர் பாராட்டு

சதன்பிராபகரைப் பாராட்டி தமிழ்நாடு முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருக்கிறார்.

அதில், ‘தமிழகத்தின் முதல் பிளாஸ்மா வங்கியில் முதல்நபராக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ததுடன் மீண்டும் தானம் செய்யவுள்ளதாகவும் கூறிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிராபகர் அவர்களுக்கு மக்கள் சார்பாகவும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.