டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள்.. வீடு தேடு வரும் ஆக்சிஜன்.. கெஜ்ரிவால்

டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள்.. வீடு தேடு வரும் ஆக்சிஜன்.. கெஜ்ரிவால்

டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது என் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த வாரம் வரை மிகவும் கடுமையாக இருந்தது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் இறந்தனர். தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள்.. வீடு தேடு வரும் ஆக்சிஜன்.. கெஜ்ரிவால்
ஆக்சிஜன் சிலிண்டர்

இன்று (நேற்று) முதல் நாங்கள் ஒரு மிக முக்கியமான சேவையைத் தொடங்குகிறோம். ஆக்சிஜன் செறிவூட்டல் (சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து அளிக்க உதவும் சாதனம்தான் ஆக்சிஜன் செறிவூட்டல்) வங்கிகளை அமைத்து வருகிறோம். டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 ஆக்சிஜன் செறிவூட்டல் சாதனம் கொண்ட வங்கி இருக்கும்.

டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள்.. வீடு தேடு வரும் ஆக்சிஜன்.. கெஜ்ரிவால்
ஆக்சிஜன் செறிவூட்டல்

கோவிட் நோயாளிகளுக்கு தேவைப்படும்போது மருத்துவ ஆக்சிஜனை கொடுக்காதபோது அவர்கள் ஐ.சி.யூ.களில் அனுமதிக்கப்படுவது காணப்படுகிறது. சில நேரங்களில் நோயாளிகள் இறந்து போய் விடுகிறார்கள். இந்த இடைவெளிகளை பூர்த்தி செய்ய இந்த வங்கிகளை அமைத்துள்ளோம். வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் எந்தவொரு நோயாளிக்கும் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்பட்டால் எங்கள் குழு 2 மணி நேரத்துக்குள் அவர்களின் வீட்டுக்கு செல்லும். குழுவில் ஒருவர் தொழில்நுட்பம் தெரிந்தவர் மற்றொருவர் நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உதவுபவராக இருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.