சீன தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

 

சீன தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

சீன ராணுவம் சுட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீன தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீடில், “லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தாக்கியதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று கூறியுள்ளார்.

http://


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கலில், “லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரை சீன இராணுவம் தாக்கியதில், தம் இன்னுயிர் ஈந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வீரமரணம் எய்திய சகோதரர் திரு.பழனி அவர்களின் மறைவால் மீளாத் துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

http://


தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.