மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

 

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அத்துடன் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

இதை தொடர்ந்து மதுரையில் உள்ள மருது சகோதர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் சாலை மார்க்கமாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்துகொள்ள செல்கின்றனர்.

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

முன்னதாக தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை நகர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்கள் மதுரை நகர் பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் தெரிவித்துள்ளது.