ஜெயலலிதா வழியில் முதல்வர் செயல்படுகிறார் : அமைச்சர் செங்கோட்டையன்

 

ஜெயலலிதா வழியில் முதல்வர் செயல்படுகிறார் : அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வழியில் முதல்வர் செயல்படுகிறார் : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “முதல்வர் பழனிசாமி ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரை பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பாடு உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரீகம் அல்ல என்பது தான் என் கருத்து ” என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா வழியில் முதல்வர் செயல்படுகிறார் : அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரையும் அதிமுக நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.