2022ல் உ.பி. உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும்.. தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

2022ல் உ.பி. உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும்.. தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் திட்டமிட்டப்படி சரியான நேரத்தில் நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களின் ஆட்சிக்காலம் 2022 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. அதேநேரத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைய உள்ளது. இதனால் 2022ம் ஆண்டில் மொத்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. கொரோனா வைரஸின் 3வது அலை வரக்கூடும் என்ற எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த ஆண்டு இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் சரியான நேரத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022ல் உ.பி. உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும்.. தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
இந்திய தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைதற்கு முன் தேர்தலை நடத்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை (கவர்னரிடம்) சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் முதன்மையான கடமையாகும். தொற்றுநோயின் போது பீகாரில் தேர்தலை நடத்தினோம்.

2022ல் உ.பி. உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும்.. தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
தேர்தல்

மேலும், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தினோம். எங்களுக்கு அனுபவம் உள்ளது. தொற்றுநோய்களின் போது எவ்வாறு வாக்குப்பதிவை நடத்துவது என்பது குறித்து பல்வேறு அனுபவங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். இப்போது குறைந்து வரும் தொற்றுநோயுடன், விரைவில் தொற்றுநோய் விரைவில் முடிந்து விடும் என்று நம்புகிறேன். திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்தும் நிலையில் நாங்கள் இருப்போம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.