தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

 

தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படும் என அறிவித்தது.

தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

இதைத் தொடர்ந்து பேசிய தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு, கூடுதலாக 1000 வாக்குச் சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக பிற மாநிலங்களில் இருந்து வாக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் பணி மும்முரமாக நடைபெறுவதாகவும் கூடிய விரைவில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமாருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார். இங்கு ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் புதுச்சேரி, கேரளா சென்று அங்கேயும் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு பற்றி அரோரா ஆலோசிக்கிறார்.