மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – ப.சிதம்பரம் பேட்டி!

 

மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – ப.சிதம்பரம் பேட்டி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, கடந்த மே மாதம் 7ம் ஆட்சி அமைத்தது. அப்போது கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டம். அதிரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும் பல்வேறு கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனிடையே, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தவறவில்லை. முக்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறார். ஸ்டாலினின் இந்த ஆட்சி மக்களுக்கு பொற்காலம் என பிற அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – ப.சிதம்பரம் பேட்டி!

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மேலும் அழகப்பா பல்கலை கழகத்திற்கு உடனடியாக புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என மோடி அரசு கூறியது உண்மை அல்ல. தவறான தகவலை கூறியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.