மாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கு கல்வி கட்டணம் அறிவிப்பு

 

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கு கல்வி கட்டணம் அறிவிப்பு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டணங்களை மற்ற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் அளவிற்கு குறைத்து தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது

ராஜா முத்தையா மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து ஜனவரி 28 ஆம் தேதி உயர் கல்வித்துறை வசம் இருந்த கல்லூரி மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கட்டணக் குறைப்புத் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் அரசாணையில் இல்லாமல் இருந்ததால் மாணவர்கள் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து வந்தனர். இதையடுத்து, தற்போது கட்டணக்குறைப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கு கல்வி கட்டணம் அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.13,610 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணம் ரூ.11,610 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்டி, எம்.எஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கான டியசன் கட்டணத்தை ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.20,000 எனவும், பிஎஸ்சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.