• August
    25
    Sunday

Main Area

chidambaram
சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை!

சிதம்பரத்தில், நாட்டு வெடி குண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் , அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாண்டியன்  வயது 40. இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

pandiyan

இவர் நேற்றிரவு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில், சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கோழி பாண்டியனை  அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது கோழி பாண்டியன் தப்ப முயன்றதால் மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை கொல்ல முயற்சித்தனர். பின் அரிவாளால்வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கோழி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு அங்கு ஆய்வு நடத்தி வெடிக்காத மற்றொரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.  கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அபிநவ் சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் அண்ணாமலை நகர் போலீஸார் பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போன கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

gowtham Wed, 08/21/2019 - 16:49
chidambaram bomb explode ரவுடி கோழி பாண்டியன் தமிழகம் க்ரைம்

English Title

Bomb explodes in Chidambaram

News Order

0

Ticker

0 
சித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல்

சித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல் -அம்பது கிலோ மீட்டர் சுத்தளவுல அடிச்சிக்க ஆளில்லீங்கோ!

திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் போகும் சாலையில் இருக்கிறது சித்தாலந்தூர். அந்த சின்ன கிராமத்தில் இருக்கும் சின்னஞ்சிறு ஹோட்டல் தான் சிதம்பரம் ஹோட்டல். 50 வருடங்களுக்கு மே...


திருநல்லூர் பெருமணம்

பாடல் பெற்ற தலங்கள் வரிசை-5 : திருநல்லூர் பெருமணம்

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்...சிவபுரி

சிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில் 

இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பால் அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது  நம்பிக்கை.


சிதம்பரம் நடராஜன்

பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.அதன் ஆதி பெயர் தில்லை.சிதம்பரம் என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயர்.தில்லை என்பது ஒரு மரம்.அதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தல விருட...


Thol. thirumavalavan stalin -TTN

சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் திருமாவளவன்: உற்சாகத்தில் விசிக தொண்டர்கள்!

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
chidambaram natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத தேரோட்டம்!

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


natarajar

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


natarajar

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வருகின்ற14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக கருதப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுபெருவிழாவாக கருதப்படும் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது.


siva

திருவாதிரை களி ஏன் சிவனுக்கு உகந்தது ?

மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நோன்பு அன்று இறைவனுக்கு நெய்வேத்தியமாக திருவாதிரை களி ஏன் படைக்கபடுகின்றது என்பதை பற்றிய வரலாற்று கதையினை பற்றி விரிவாக பார்போம்.


markali

மார்கழி திருவாதிரை விரதத்தின் மேன்மைகள்

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை விரதம் இருந்து ஆருத்ரா தரிசனம் செய்வது பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும்.

2018 TopTamilNews. All rights reserved.