தேனியில் மர்மநோய் தாக்கி கொத்துக்கொத்தாக பலியாகும் நாட்டுக்கோழிகள்… அச்சத்தில் விவசாயிகள்…

 

தேனியில் மர்மநோய் தாக்கி கொத்துக்கொத்தாக பலியாகும் நாட்டுக்கோழிகள்… அச்சத்தில் விவசாயிகள்…

தேனி

தேனி மாவட்டத்தில் மர்மநோய் தாக்குதல் காரணமாக நாட்டுகோழிகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் தங்களது வீடுகள் மற்றும் தோட்டங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிறப்பாறை, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் உள்ள நாட்டுக்கோழிகள் மர்மநோய் தாக்குதல் காரணமாக உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்படாததால், கோழிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தொடர்ந்து இறந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனியில் மர்மநோய் தாக்கி கொத்துக்கொத்தாக பலியாகும் நாட்டுக்கோழிகள்… அச்சத்தில் விவசாயிகள்…

அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் பரவி வரும் இந்த மர்மநோயால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் தங்களது கோழிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டுக்கோழிகள் தவிர்த்து, அந்த பகுதிகளில் உள்ள நாட்டு மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் மர்மநோய் தாக்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த பேசிய அந்த பகுதி மக்கள், தேனி மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் பாதிப்பிற்கு உள்ளான கிராமங்களில் முகாம் அமைத்து மர்மநோயை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.