‘சிக்கன் 65’ – பெயர் வந்தது எப்படி?

 

‘சிக்கன் 65’ – பெயர் வந்தது எப்படி?

அசைவச் சாப்பாட்டில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் குழம்பு, மீன் பொறியல், நண்டுப் பொறியல் காடை வறுவல் எனப் பல இருந்தாலும் தமிழகத்தில் அதிக அளவு விற்பனையவது ‘சிக்கன் – 65’தான். கோழியை மசாலா தடவி துண்டு, துண்டுகளாக வெட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுப்பதுதான் சிக்கன் – 65. இந்த சிக்கன் 65 கண்டு பிடிக்கப்பட்டது 1965-ம் ஆண்டு. இன்றைக்கு 2020 ஆனாலும் சிக்கன் 65 தவிர வேறு எந்தக் கோழிக் கறியும் இப்படிப் பெயர் எடுக்கவில்லை.

‘சிக்கன் 65’ – பெயர் வந்தது எப்படி?


ஒருகாலத்தில் சென்னையில் மிகப் பிரபலமானது புஹாரி ஓட்டல்.பிரியாணி, பரோட்டா- சால்னா என அசைவச் சப்பாட்டில் இவர்களுக்கு இணையாக அப்போது வேறு யாரும் இல்லை. 1950 முதல் இந்த ஓட்டல் இயங்கத் தொடங்கியது. இந்த உணவகத்தின் நிறுவனர் பெயர் எ.எம். புகாரி. அவரது பெயரில்தான் இந்த ஓட்டல் இயங்கி வந்தது.1960-க்குப் பிறகுதான் இந்த ஓட்டல் பிரபலமடையத் தொடங்கியது. முன்னாதாக 10 ஆண்டு காலம் இந்த ஒட்டலின் உரிமையாளர் சுமார் 200 வகையில் பிரியாணி செய்து பார்த்து கடைசியில்தான் மிகச் சுவையான பிரியாணியைக் கண்டு பிடித்தாராம்.

‘சிக்கன் 65’ – பெயர் வந்தது எப்படி?


1965 புத்தாண்டின் போது, ஸ்பெஷலாக ஒரு சிக்கனைத் தயார் செய்தார் புஹாரி. அதனை சாப்பிட வந்தவருக்குப் பரிமாறினார். சாப்பிட்டுப் பார்த்த வாடிக்கையாளர் இதன் பெயர் என்னவென்று கேட்க, அவர் சற்றும் யோசிக்காமல் ‘சிக்கன் 65’ என்று கூறினார். பின்னர் அப்படியே சிக்கன் 65 என்ற பெயர் நிலைத்து போனது.
இதன் பிறகுதான் தமிழகத்தின் பல ஓட்டல்களில் சிக்கன் – 65 சமைக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பலர் சிக்கன் 78, சிக்கன் 82, சிக்கன் 90- எனத் தயாரித்து அறிமுகப் படுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவை புகழ் பெறவில்லை.