ஆமாம்.. மத்திய அரசு சொன்னது உண்மைதான்… உண்மை ஒப்புக்கொண்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர்

 

ஆமாம்.. மத்திய அரசு சொன்னது உண்மைதான்… உண்மை ஒப்புக்கொண்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர்

மத்திய அரசு சொன்னது உண்மைதான், எங்க மாநிலத்தில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ தெரிவித்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் டெல்லி உள்பட பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மக்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் பேசுகையில், கொரோனா உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் குறைத்துக் காட்டுங்கள் என்று மாநிலங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எங்களிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், மாநில அரசுகள் அனுப்பியவைதான். மாநிலஅரசுகள்தான் கொரோனா உயிரிழப்பை பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் பணி என்பது அவர்கள் வழங்கும் புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வதுதான். அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களின்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. என்று தெரிவித்தார்.

ஆமாம்.. மத்திய அரசு சொன்னது உண்மைதான்… உண்மை ஒப்புக்கொண்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர்
டி.எஸ். சிங் தியோ

மத்திய அரசின் இந்த தகவல் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மத்திய அரசு சொன்னது உண்மைதான் என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் முதல்வர் பூபேந்திர சிங் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த நோயாளியும் இறக்கவில்லை என்பது உண்மைதான். எங்கள் மாநிலம் ஆக்சிஜன் உபரி மாநிலமாகும். நிர்வாகம் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்திருக்கலாம். மற்றப்படி ஆக்சிஜன் இல்லாததால் மரணம் ஏற்படவில்லை.

ஆமாம்.. மத்திய அரசு சொன்னது உண்மைதான்… உண்மை ஒப்புக்கொண்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர்
மத்திய அரசு

குறைந்தபட்சம் அவர்கள் (மத்திய அரசு) சுகாதாரம் ஒரு மாநில விஷயம் என்று ஒப்புக்கொண்டனர். இல்லையெனில், அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போல் தோன்றியது. அனைத்து நல்ல விஷயங்களுக்கும் அவர்கள் (மத்திய அரசு) பெயர் வாங்குகிறார்கள், மோசமான எல்லாவற்றுக்கும் மாநிலங்களை குறை கூறுகிறார்கள். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி கேள்விப்பட்டோம். ஆனால் அதை எவ்வாறு புகாரளிப்பது என்பது அங்குள்ள அரசாங்களிடமே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.