விவசாயிகளிடமிருந்து பசு சாணம் வாங்கும் சத்தீஸ்கர் அரசு

 

விவசாயிகளிடமிருந்து பசு சாணம் வாங்கும் சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை வளர்ப்பை வர்த்தக ரீதியாக லாபகரமாக்க, கால்நடைகள் திறந்த மேய்ச்சலை தடுக்க, தெருவில் மாடுகள் சுற்றுவதால் ஏற்படும் பிரச்சினை தீர்க்க மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதற்காக கோதன் நியாயே யோஜானா என்ற திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகேல் அறிமுகம் செய்து வைத்தார்.

விவசாயிகளிடமிருந்து பசு சாணம் வாங்கும் சத்தீஸ்கர் அரசு

இந்த திட்டத்தின்படி, விவசாயிகளிடமிருந்து மாட்டு சாணத்தை மாநில அரசு விலைக்கு வாங்கி மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தும். பின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மண்புழு உரத்தை மாநில அரசு விற்பனை செய்யும். சத்தீஸ்கர் அரசின் இந்த நடவடிக்கையால் கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபகரமாக மாறும் மற்றும் இயற்கை உரமும் கிடைக்கும்.

விவசாயிகளிடமிருந்து பசு சாணம் வாங்கும் சத்தீஸ்கர் அரசு

முதல்வர் பூபேஷ் பாகேல் இது தொடர்பாக கூறியதாவது: கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நிலையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேளாண் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தலைமையிலான 5 பேர் கொண்ட துணை கமிட்டி, விவசாயிகள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் கலந்துரையாடி பசு சாணம் கொள்முதல் விலையை எட்டு நாட்களுக்குள் நிர்ணயம் செய்யும். ஹரேலி திருவிழா முதல் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மாட்டு சாணம் கொள்முதல் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.