புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்

புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்

இந்த கடினமான காலத்தில் புதிய சட்டப்பேரவை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நிறுத்துவதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் நவ ராய்ப்பூர் பகுதியில் புதிய சட்டப்பேரவை, கவர்னர் மாளிகை, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் குடியிருப்புகள், புதிய சர்கியுட் வீடு உள்ளிட்டவை கட்டும் திட்டத்துக்கான பூமி பூஜை விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தொற்றுநோய் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா திட்டம்) கட்டுமான பணியை மேற்கொண்டு வருவதை காங்கிரஸ் தலைமை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்
பிரியங்கா, ராகுல், சோனியா

சென்ட்ரல் விஸ்டா பணிக்கு செலவிடும் பணத்தில் தடுப்பூசி மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு தேவையான மருந்துகள் வாங்கலாம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு புதிய சட்டப்பேரவை கட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்
பூபேஷ் பாகல்

இந்நிலையில் நேற்று புதிய சட்டப்பேரவை உள்ளிட்ட கட்டுமான பணிகளை சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் டிவிட்டரில், எங்கள் குடிமக்கள்-எங்கள் முன்னுரிமை. கொரோனா தொடங்குவதற்கு முன்பு புதிய சட்டப்பேரவை கட்டிடம், கவர்னர் மாளிகை முதல்வர், அமைச்சர்கள மற்றும் மூத்த அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று, நெருக்கடியான இந்த காலங்களில் இந்த கட்டுமான பணிகள் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என பதிவு செய்து இருந்தார்.

புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

சத்தீஸ்கர் முதல்வரின் டிவிட்டை, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ரீடிவிட் செய்து மோடி அரசை தாக்கினார். ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஜனநாயகத்தில் ஒரு பதிலளிக்கக்கூடிய மற்றும் பொறுப்பான அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது. சத்தீஸ்கர் அரசு எல்லாவற்றுக்கும் மேலாக தனது மக்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் கோவிட்-19ஐ எதிர்த்து போராடுவதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறது. எப்போது நீங்கள் கற்று கொள்வீர்கள். சென்ட்ரல் விஸ்டா பைத்தியக்காரதனத்தை நிறுத்துவீர்கள்? என்று பதிவு செய்து இருந்தார்.