முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் இடையே மோதல்.. சத்தீஸ்கருக்கு ராகுல் காந்தி வர்றார்.. காங்கிரஸ் தகவல்

முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் இடையே மோதல்.. சத்தீஸ்கருக்கு ராகுல் காந்தி வர்றார்.. காங்கிரஸ் தகவல்

சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் அமைச்சருக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வரும் வேளையில், அம்மாநிலத்துக்கு ராகுல் காந்தி விரைவில் வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் மார்க்கம் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் போன்று சத்தீஸ்கர் காங்கிரசிலும் அதிகார மோதல் நிலவி வருகிறது. முதல்வர் பதவிக்காக முதல்வர் பூபேஷ் பாகலுக்கும், அம்மாநில சுகாதார துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கருக்கு ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம் தெரிவித்தார்.

முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் இடையே மோதல்.. சத்தீஸ்கருக்கு ராகுல் காந்தி வர்றார்.. காங்கிரஸ் தகவல்

சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் மார்க்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி விரைவில் மாநிலத்துக்கு வருவார். அவர் பஸ்தார் மற்றும் சுர்குஜா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யலாம். நான் பூபேஷ் பாகல் முகாமிலோ அல்லது டி.எஸ். சிங் தியோ முகாமிலோ இல்லை. நான் அமைப்பின் உறுப்பினர் மற்றும் தலைவராக இருக்கிறேன். பாதுகாவலர் பாத்திரததை வகிப்பது என் கடமை. தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்.

முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் இடையே மோதல்.. சத்தீஸ்கருக்கு ராகுல் காந்தி வர்றார்.. காங்கிரஸ் தகவல்
பூபேஷ் பாகல்

முதல்வர்கள் வருவார்கள், போவார்கள். நான் ஒரு அமைப்பின் தலைவராக வேலை செய்கிறேன். முதல்வருக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளில், கட்சியின் மேலிடம் இந்த விஷயத்தில் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2023ல் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.