எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. தொற்று இருந்தால் அவைக்குள் அனுமதி நோ.. சத்தீஸ்கர் அரசு

எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. தொற்று இருந்தால் அவைக்குள் அனுமதி நோ.. சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் அந்த கூட்டத்தொடர் 28ம் தேதி முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கான பணிகளை சட்டப்பேரவை அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. தொற்று இருந்தால் அவைக்குள் அனுமதி நோ.. சத்தீஸ்கர் அரசு

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொற்றுநோய் மத்தியில், பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் சத்தீஸ்கர் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.

எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. தொற்று இருந்தால் அவைக்குள் அனுமதி நோ.. சத்தீஸ்கர் அரசு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு எம்.எல்,ஏ.வும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். பரிசோதனையில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா இருப்பது உறுதியானால் அவர்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையே தடுப்பாக கிளாஸ் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.