செட்டிநாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு

 

செட்டிநாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு

தினமும் சாம்பார் , காரக்குழம்பு என்று சாப்பிட்டு சலித்து விட்டதா ? ஒரு முறை இந்த சுவையான செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பை ருசித்து பாருங்கள்… 

செட்டிநாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்

து.பருப்பு : 1/2 ஆழாக்கு, க.பருப்பு : 1/2 ஆழாக்கு, தேங்காய் : 1/2 மூடி, சாம்பார் பொடி :  5 டேபிள் ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் : 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் : 2, தக்காளி : 1, சோம்பு : 2, டீஸ்பூன் பட்டை : சிறு துண்டு, பூண்டு : 15 பல், எண்ணெய் : 4 டேபிள் ஸ்பூன், புளி : நெல்லிக்காய் அளவு, உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

  • துவரம் பருப்பையும் ,கடலைப் பருப்பையும் ஒன்றாய் ஊறப் போடவும் . ஊறிய பின் மிக்ஸியில் வைத்து கொர கொரவென்று அரைத்து கொள்ள வேண்டும் . 
  • தேங்காய் துருவி , பூண்டு 10 பல் , ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் . 
  • அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் வெங்காயம் , தேங்காய் துருவல் , பூண்டு நறுக்கியது, மிளகாய்த்தூள் , உப்பு எல்லாம் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக ஒரு தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும் . 
  • உருட்டி வைத்த உருண்டையை எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வறுத்தெடுக்கவும் .
  • மீதமுள்ள ஒரு வெங்காயத்தையும், தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் 5 பூண்டு பல்லையும் உரித்து வைத்து கொள்ளவும் . 
  • சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் சோம்பையும், பட்டையையும் போட்டு வெடித்தவுடன் அரிந்து வைத்துள்ள வெங்காயம் ,பூண்டு , தக்காளி எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும் . 
  • வதக்கியவுடன் சாம்பார் பொடியை போட்டு , புளி , உப்பு கரைத்து அதில் ஊற்றவும் . அரைச்சட்டி குழம்பு வைக்க வேண்டும் . 
  • குழம்பு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள உருண்டையை போட்டு கொதிக்க விடவும் . 5 நிமிடம் கழித்து இறக்கி வைக்க வேண்டும் . கெட்டிக் குழம்பாக இருக்கும் . 

சூடான சுவையான செட்டிநாடு ஸ்டைல் பருப்பு உருண்டைக் குழம்பு தயார் !!!!