‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

நடப்பாண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெற்றுவருகிறது. கரோனா பாதுகாப்புக்காக கோவாவிலுள்ள மைதானங்களில் மட்டுமே அனைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

ஆரம்பப் போட்டிகளில் பந்து கோல் போஸ்ட் பக்கமே செல்லாவிட்டாலும், சென்ற வாரத்திலிருந்து கால்பந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் கோல் மழை பொழிந்துகொண்டே இருக்கின்றனர் அனைத்து அணி வீரர்களும்.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

நேற்றைய போட்டியில் சென்னையின் எப்சிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கோல்களை அடித்து அசத்தியிருக்கிறது ஹைதராபாத் அணி. கிரிக்கெட்டில் மட்டுமல்ல கால்பந்திலும் இந்தாண்டு சென்னை அணிக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். எவ்வளவு மோசமாக விளையாட முடியுமோ அவ்வளவு மோசமாக விளையாடி ரசிகர்களை வெறுப்பாற்றில் நீந்தவிட்டார்கள் என்றே கூறலாம்.

சென்னை அணியிடம் ஆரம்பத்திலிருந்தே ஒரு குறை இருந்துவருகிறது. மிட்பீல்டில் கிரியேட்டிவிட்டி என்ற ஒன்று தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் அளவுக்குக் கூட இல்லை என்பதே நிதர்சனம். டிபென்ஸுக்கும் அட்டாக்கிற்கும் பாலமாகச் செயல்படுபவர்கள் மிட்பீல்டர்கள்.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

அவர்களின் கிரியேட்டிவிட்டி தான் பந்தைக் கோல் போஸ்ட்டை நோக்கி நகர்த்திச் செல்லும். எதிராளியின் கால்களிலிருந்து பந்தை லாவகமாக உருவிச் சென்று தங்கள் அணியின் ஸ்டிரைக்கர்களுக்குக் கொடுப்பதுதான் கிரியேட்டிவிட்டி. எதிரணி டேக்கிள், கிராஸ் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க சென்னை அணியோ பந்தை உருட்டிக்கொண்டிருந்தது.

சென்னையின் மிட்பீல்டர்கள் பந்தைச் சரியாகக் கூட பாஸ் செய்யவில்லை. “ஒன்னு ரெண்டு மிஸ் பாஸ்னா பராவல்ல… எல்லாமே மிஸ் பாஸா போனா எப்படி பாஸ்” என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

அணியின் கேப்டனும், தி கிரேட் மிட்பீல்டருமான ரபேல் கிரிவலரோ மட்டும் ஓரளவு நம்பிக்கையளித்தாலும், மற்றவர்கள் தேமேவென பந்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க கிரிவலரோ காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை. இந்த ஒற்றைச் செய்தி போதும் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே கணிப்பதற்கு. (1-4)

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

எப்போதும் டிபென்ஸில் தங்களது பலத்தைக் காட்டி குறைவான கோல்களை கன்சீட் செய்யும் சென்னை, நேற்று அதிலும் கோட்டைவிட்டது. இது பயிற்சியாளரான சாபா லாஸ்லோவை கடுங்கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியது போல செய்தியாளர் சந்திப்பில் பொறிந்து தள்ளிவிட்டார்.

அவர் கூறுகையில், “ஹைதராபாத் அணி ஆட்டத்தின் பிற்பாதியில் கோல்கள் அடித்திருந்தாலும், முற்பாதியில் சென்னை வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்று அர்த்தமில்லை. அதிலும் அவர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். கோல்கீப்பர் விஷால் கைத்தின் சேவ்களால் கோல்கள் அதிகமாகச் செல்லவில்லை. இல்லையென்றால் ஏழு, எட்டு கோல்களை எதிரணியினர் அடித்திருப்பார்கள்.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் இது எனது அணியின் முழுமையான கால்பந்து போட்டி அல்ல. மிட்பீல்டில் கிரியேட்டிவிட்டி என்ற ஒன்றைக் காணவே முடியவில்லை. அதன் பலனைத் தான் ஆட்டத்தின் முடிவில் அணி வீரர்கள் உணர்ந்தனர்.

மிட்பீல்டர்களாகக் களமிறக்கப்பட்ட சாங்க்தெவும் மெமோவும் சாதாரண ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் கிரியேட்டிவிட்டி இல்லை. கால்பந்தைப் பொறுத்தவரையில் கிரியேட்டிவிட்டி இல்லையென்றால் கோல் இல்லை.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

இந்தப் போட்டி மகிழ்ச்சிகரமான ஒன்றாக அமையவில்லை. ஆனால் உள்ளே இருக்கும் பிரச்சனைகளைக் களைந்து நிச்சயம் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம். அட்டகாசமான கம்பேக் கொடுப்போம்” என்று பேசி முடித்தார்.

கடந்தாண்டில் நடைபெற்ற தொடரின் பாதி வரை சென்னை அணி இதுபோன்ற மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திவந்தது. அதற்குப் பின் சென்னை செய்த சம்பவங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. கோப்பையைக் கைப்பற்றாமல் போனாலும் ஃபைனல் வரை வந்து அனைவரது பாராட்டைப் பெற்றார்கள்.

அப்போது அவர்களிடம் வல்ஸ்கீஸ் என்ற கோல்டன் பூட் ஸ்டிரைக்கர் இருந்தார். இப்போது அப்படி ஒருவர் இன்னும் வெளிப்படவில்லை அல்லது இல்லை. இப்போது ஸ்டிரைக்கர் என்று அறியப்படும் சில்வெஸ்டரிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவர் அடிக்கும் அனைத்துப் பந்துகளும் கோலைத் தவிர எல்லா இடங்களுக்கும் செல்கிறது.

‘கிரிக்கெட்ல மட்டுமில்ல புட்பால்லையும் சென்னைக்கு சூனியம் வச்சிட்டாங்க’ – குமுறும் ரசிகர்கள்

இவ்வாறு அனைத்து ஏரியாவிலும் குறைகளை மட்டுமே நிறைவாகக் கொண்டுள்ள சென்னை அணியைப் பயிற்சியாளர் சாபா லாஸ்லோ எவ்வாறு மீட்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக சென்னையின் எப்சி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

அடுத்த போட்டியில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கப் போகிறார்? மாற்றங்கள் கைகொடுக்குமா அல்லது வீழ்த்துமா? போன்ற கேள்விகளுக்கான விடையை 10ஆம் தேதி காண்போம்.