சென்னையின் பிரதான சாலைகள் மூடல்!

 

சென்னையின் பிரதான சாலைகள் மூடல்!

நிவர் புயல் இன்று நள்ளிரவு 2 மணியளவில் கரையை கடக்கவுள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயல் இன்று நள்ளிரவு 2 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. நிவர் புயல் எதிரொலியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நிவர் புயலை கரையை கடக்கும் போது, 155 கிலோ மீட்டர் கரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிககை விடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சென்னையின் பிரதான சாலைகள் மூடல்!

இந்நிலையில் சென்னை எண்ணூர், மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் கடற்கரை சாலைகள், அண்ணாசாலை, பூவிருந்தவில்லி சாலைகள் உள்ளிட்ட பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தாம்பரம், போரூர், மணலி, ஈசிஆர், ஓம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.