சிலை மனிதரின் வாழ்வை புரட்டி போட்ட கொரோனா !

 

சிலை மனிதரின் வாழ்வை புரட்டி போட்ட கொரோனா !

கொரோனா பரவல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி யுனிவெர்செல் கிங்டம் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்து 30 ஆண்டுகள் தான் செய்த பணியை விட்டு மாற்று வேலைக்கு புறப்பட்டுள்ளார் சிலை மனிதர் தாஸ்.

விஜிபி செல்லும் யாராக இருந்தாலும் சிலை மனிதரை சிரிக்க வைக்க முயற்சி செய்து தோற்று போவார்கள். அப்படி 30 வருடமாகச் சிலை மனிதனாக இருந்து கொஞ்சம் கூட சிரிக்காமலிருந்தவரின் பயணத்தை மேலும் சோகமயமாக மாற்றியுள்ளது கொரோனா.

சிலை மனிதரின் வாழ்வை புரட்டி போட்ட கொரோனா !

கடந்த 1991ம் முதல் சென்னையில் சிலை மனிதனாக ரூ.600க்கு பணியில் சேர்ந்த தாஸ் தினந்தோறும் 4 மணி நேரம் பணியை மேற்கொள்வார். தற்போது அவரின் சம்பளம் 30 ஆண்டுகளில் ரூ. 8,400 ஆக உள்ளது. தனது சம்பள தொகையில் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி வந்த 60 வயதான இவர் கடந்த 5 மாதங்களாக வேலையின்றி வீட்டிலிருந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து வேறு வழியின்றி செக்யூரிட்டி பணிக்கு சென்றுள்ளார்.

சிலை மனிதரின் வாழ்வை புரட்டி போட்ட கொரோனா !

தனது இறுக்கத்தால் அனைவரையும் சிரிக்க வைத்து அழகு பார்க்கும் இந்த சிலை மனிதரின் வாழ்க்கையும் கொரோனாவால் மொத்தமாக இறுகி போயுள்ளது.