ஊரடங்கால் வேலை இழப்பு… வறுமையால் தவித்த மனைவி, குழந்தைகள்!- உயிரை மாய்த்த எலெக்ட்ரிசீயன்

ஊரடங்கால் வேலையை இல்லாமல் தவித்த கணவன் போதைக்கு அடிமையானதோடு, மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த வேதனையான சம்பவம் சென்னை அம்பத்தூரில் நடந்துள்ளது.

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு மதுரா மேட்டூர் 4-வது தெருவைச் சேர்ந்த எலெக்ட்ரிசீயன் ராம்தாஸுக்கும் (30), தமிழ்செல்விக்கும் (24) கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ராம்தாஸின் குடும்பத்தினர் அதே பகுதியில் குடியிருந்து வந்தனர். சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ராம்தாஸுக்கு ஊரடங்கால் வேலை இல்லாமல் போனது. வீட்டிலேயே முடங்கி கிடந்த ராமதாஸுக்கு வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவந்துள்ளார் ராமதாஸ். வேலை இல்லாததால் எப்போதும் நண்பர்கள் உதவியுடன் மதுவாங்கி குடித்து வந்துள்ளார். இதனால் வீட்டுக்கு சரியான நேரத்துக்கு ராமதாஸ் வராததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் போதையில் ராம்தாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, “குடித்து ஏன் உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள், குழந்தைகளும், நானும் உங்களை நம்பியிருக்கிறோம்” என்று தமிழ்செல்வி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம்தாஸ், “நான் அப்படிதான் குடிப்பேன்” என்று தகராறு செய்ததோடு, குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், கோபத்தில், குழந்தைகளுடன் அறைக்கு சென்று தூங்கச் சென்றுவிட்டார் ராமதாஸ். போதையில் ராமதாஸ், வீட்டின் ஹாலில் உளறிக்கொண்டிருந்தார்.

அதிகாலையில் திடீரென அந்தப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதனால் கண்விழித்த தமிழ்செல்வி, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஹாலுக்கு வந்துள்ளார். கணவர் தூக்கில் தொங்கி கிடப்பதை பார்த்து அலறியுள்ளார். தமிழ்செல்வியின் சத்தம் கேட்டு ராம்தாஸின் அப்பா மற்றும் உறவினர்கள் ராம்தாஸ் வீட்டுக்கு ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் உடனடியாக ராம்தாஸை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ராம்தாஸ் வரும்வழியில் இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தத் தகவல் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராம்தாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ராம்தாஸின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்ச்செல்வியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தமிழ்ச்செல்வி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் சொந்த ஊர் கரளபாக்கம் என்றும் ராம்தாஸிக்கும் எனக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், கணவர் ராமதாஸ் 9-வது வகுப்பு வரை படித்துவிட்டு எலெக்ட்ரிசீயனாக பணியாற்றி வந்தார் என்றும் ஊரடங்கால் மதுவுக்கு அடிமையானதாகவும் கடந்த 27-ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும், மதுவாங்க பணம் கேட்டு தகராறு செய்ததாகவும் பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தமிழ்ச்செல்வி கூறியுள்ளார். தமிழ்ச்செல்வியின் புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

- Advertisment -

Most Popular

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

தேனியில் கொரோனாத் தொற்று அதிகாித்து வரும் நிலையில், குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் மாதம்...

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

கொரானாவை ஒழிக்க புதிதாக திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடகூடாது என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், அதை மீறி மக்களை கூட்டி திருமண ஊர்வலம் நடத்தியதால் புவனேஷ்வரில் கல்யாண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஒடிஷா...

என்.எல்.சி கோர விபத்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே...

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளி

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முறையாக மக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் பரவலாக பயணம் செய்து ஆய்வு செய்தபோது பலரும் சமூக இடைவெளியின்றி கடைகளில் குவிந்திருப்பதையும்...
Open

ttn

Close